உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 2. சிற்றப்பன் சந்திப்பு

வன்கண்ண்ன் கீழ் இறங்கிக் கதவைத் திறப்பதற். குத் தர்மதம் ஆயிற்று. கதவு அவ்வளவு பாதுகாவலுடன் மூடப்பட்டிருந்தது. முழுமையும் திறக்கப் படவில்லை. சிறிதே திறக்கப்பட்டது. இளைஞன் உள்நுழைந்ததும் உடனே கதவு மூடப்பட்டது. கிழவன் இளைஞனைச்சமையல் அறையில் புகுமாறு பணித்துத் தான் சிறிது நேரத்திற்கெல்லாம் வருவதாகக் கூறி அனுப்பினன்.

சமையல் அறை விசாலமாக இருந்தது. தீயும் எரிந்து கொண்டிருந்தது. அவ்வளவு பரந்த அறைக் கேற்ற சமைக்கும் பொருள்கள் அங்குக் காட்சி அளிக் கவில்லை. சில கோப்பைகளும், உண் பொருள்களுமே காணப்பட்டன. ஆனல், சுவர்களைச் சார்ந்து பல அல. மாரிகள் இருந்தன. அவை யாவும் பெரிய பூட்டுகள் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன. அறைக்கு இடையே ஒரு மேசை போடப்பட்டிருந்தது. அதற்குமேல் ஒரு பாத்திரத்தில் களி சமைத்து வைக்கப்பட்டிருக்தது. ஒரு கரண்டியும் காணப்பட்டது. ஒரு கோப் பையில் திராட்சைரசம் நிரப்பப்பட்டும் இருந்தது.

இவற்றையெல்லாம் மிகுக்க ஆச்சரியத்தோடு அமலநாதன் பார்த்துக்கொண்டே இருக்கையில், வன் கண்ணன் உள்ளே நுழைந்தான். அவனது தோற்றம் இளைஞனுக்குப் பிடிக்கவில்லை. அவனப்பற்றித் தாழ்வாக எண்ணிவிட்டான். ஊர் மக்கள் உரைத்தது உண்மை என்பது அப்போது தான் அவனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/15&oldid=1228734" இலிருந்து மீள்விக்கப்பட்டது