உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமல நாதன். 32 காத்துக் கொண்டிருக்கிறேன், என்றன். செல்வம் உள்ள காலத்துப் பணிவாகவும் வறுமை உள்ள காலத்துத் தாழ்ந்து தன் மானத்தைக் குறைத்துக் கொள்ளாமலும் ஒருவன் வாழ வேண்டும் எனக் கூறும் பெருக்கத்து வேண்டும் பணிவு ; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. ” என்னும் உண்மையைச் சிறுவன் அத்தருணத்தில் நிலைநாட்டின்ை.

கிழவன் விழித்துக்கொண்டான். சிறுவனது மனத்துணிவைப் பற்றிச் சிறிது எண்ணினன். சிறுவனச் சிறிது சாந்தப்படுத்தி உணவு அருந்த அழைத் தான். உணவு ஒருவருக்கே அங்குத் தயாராக இருந்தது. அந்த உணவையே இருகூருக்கி ஒன்று அமல நாதனுக்கு அளித்தான். இளைஞனேக் கு றி த் து அவனுக்கு நெஞ்சில் அச்சம் குடிகொண்டது. சாப்பிட்டுக் கொண்டே இளைஞன் வாய்மூலம் தன் அண்ணன் இறந்த விகத்தை அறிந்துகொண்டான். தனக்கும் தன் அண்ணனுக்கும் உள்ள அந்தரங்க உறவுபற்றி இளைஞன் ஏதும் அறியாதவன் என்பதை யும் ஒருவாறு ஊகித்துக் கொண்டான். இருவரும் உணவு கொண்ட பின், இளைஞனேச் சிரமம் தீர உறங்குமாறு பணித்தான்.

அமலநாதனுக்கு எங்குப்படுத்து உறங்குவது என் பது தெரியவில்லை. வீடு முழுவதும் இருள் குடி கொண்டிருந்தது. வழிகாடிப் படுக்கும் இடம் செல்ல, ஒரு விளக்கு கருமாறு தன் சிற்றப்பனே வேண் டினன். அவன் விளக்குத்தர மறுத்து விட்டனன். வேறு வழி இன்மையால் கையால் வழிதடவி ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/17&oldid=1228738" இலிருந்து மீள்விக்கப்பட்டது