பக்கம்:அமல நாதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சிற்றப்பன் சந்திப்பு

13.

அறையை அடைந்தான். படுக்கப் பாயும் இல்லை; மெத்தையும் இல்லை. கீழே கரையில் படுத்துக் கொண்டான். நடந்து வந்த களேப்பாதலால் படுத்ததும் உறங்கிவிட்டான். ப்சி ருசி அறியாது, தரித் திரம் சுகம் அறியாது,” என்பது பழமொழியல்லவா? த&லயனே, படுக்கை யாதெர்ன்றும் இன்றியும் நன்கு உறங்கிவிட்டான். இளைஞன் அறையில் துழைந்து படுத்து உறங்கியதும் கிழவன் இனித் தான் எச்சரிக் கையாக இருப்பதற்காகப் பற்பல யோசனைகள் செய்யலானன்.

இளைஞன் அதிகாலையில் எழுந்தான். கதவு தாளிடப் பட்டிருந்தமையால் தட்டின்னான். கிழவன் கதவைத் திறக்க இருவரும் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, காலே உணவு அருந்தச் சமையல் அறையை அடைந்தனர். அங்கு இரு பாத்திரங்களில் களி புணவு, தயாராக வைக்கப்பட்டிருந்தது. கிழவனுக்குச் சிறிது உதாரகுணம் ஓங்கித் தனக்கென வைத்துக் கொண்டிருந்த பானத்தில் சிறிது தன் அண்ணன் மகனுக்கு அளித்தான்.

" விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று ” என்று கூறும் போது விருந்து அகத்ததா இருக்கையில் அமுதமே ஆயினும் அருந்தலாமோ? மருந்தே ஆயினும் விருந்தோடன்ருே உண்ணவேண்டும்? தன் உள் ளத்தில் சீற்றம் இருப்பினும் உணர்வில் சிறிது உதாரகுணமுடையவனுகவே கிழவன் நடந்துகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/18&oldid=1228760" இலிருந்து மீள்விக்கப்பட்டது