பக்கம்:அமல நாதன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. அமல நாதன்

இருவரும் காலை உணவை முடித்துக்கொண்டினர். கிழவன் தன் வழக்கப்படி சுருட்டு ஒன்றினை: பிடித்துக் கொண்டு இளைஞனேடு உரையாடத் தொடங்கின்ை. அவ்விளைஞன் அறிந்தவரையில் பெற்ருேரைப்பற்றி ஏதேனும் தெரியவருமோ,என்று சாராயம் வார்த்துப் பூராயம் கேட்பதுபோல் கேட்கத் தொடங்கினன். இப்படிக் கேட்பதிலிருந்து தன்னைப் பற்றி வேறுவிதமாக கினேயாதிருக்கும் பொருட்டுத் தன் முகத்தில் மகிழ்வுக் குறி காட்டிக்கொண்டே கேட்கத் தொடங்கியது அவ்வன்கண்ணனது உள் ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் நயவஞ்சகக் குணத்தை மேலும் வெளியாக்கிய தாகும். இளைஞன் தன் மனத்தில் ஏதோ ஒரு கீய எண்ணம் வைத்துக் கொண்டுதான் அங்கு வந்தாக எண்ணினன். தனக்கு அக்கிழவனேடு உரையாட மனம் இல்லாதவனுய்த் தான் படுத்திருந்த அறையைச் சுத்தம் செய்ய உத்த ரவு கொடுக்கத் தன் சிற்றப்பனே வேண்டினன். இதற்கு கேரிய விடை அளிக்காமல் கிழவன், அவ் வீடு தனக்கு உரியது. ஆதலின், அதைப் பற்றிப் பிறர் ஒன்றும் கவலைப்படவேண்டியதில்லை என்று கூறி மேலும் அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரிக் கலானுன்.

இளங்கன்று பயமறியாது அன்ருே மேலும் இளைஞர் குறும்பிலும் பேர் போனவர்கள். கண் சிற்றப்பனது சீற்றத்தை மேலும் தாண்டச்"சிறிய தந்தையிர்! வழியில் உம்மைப்பற்றி ஒரு கிழவியைக் கேட்டபோது அவள் மிகவும் வைது வசைபாடினுள். அவள் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/19&oldid=1228762" இலிருந்து மீள்விக்கப்பட்டது