பக்கம்:அமல நாதன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அமல நாதன்

வன்கண்ணன் இல்லம் மிக உயர்ந்து ஐந்து நிலையுடையது. அவற்றின் படிகள் ஒன்றுக்கொன்று வெகு தூரத்தில் இடைவெளியுடையனவாய் அமைந்திருந்தன. மேலே ஏறிச் செல்கையில் சிறிது அஜாக்கிரதையாக இருப்பினும் ஆபத்து நேர்ந்துவிடும். படிகளின் பக்கவாட்டத்திலும் யாதொரு பாதுகாப்பும் இல்லை. இந்த நிலையில் அமலநாதன் மாடிமீது ஏறத் தொடங்கினான் அப்போதுகாற்றும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. பாவம் சிறுவன் சுவர் ஒரமாக வெகு எச்சரிக்கையோடு தன் சிற்றப்பனின் சொல்லுக்கு இணங்கி மேலே ஏறத்தொடங்கினன். அவன் ஏறிச்செல்கையில் இடையில் ஒரு படி குறுக்கிட்டது. அப்படி பொய்ப்படி. அதற்கு நேர் கீழே ஒரு கிணறு இருந்தது. அதில் தப்பித்தவறி அமலநாதன் காலை வைத்திருந்தால் அப்படி முறிந்து இவன் கிணற்றில்தான் விழவேண்டும். தெய்வாதீனமாக இவன் அவ்வாபத்தினின்றும் தப்பித்துக் கொண்டான். இது தன்னைக் கொல்வதற்காகத் தன் சிற்றப்பன் செய்த சூழ்ச்சியென்பதை அவன் உணர்ந்து கொண்டான். தன் சிற்றப்பன்மீது அடக்கமுடியாக ஆத்திரம் கொண்டான். என்ருலும், “பொறுத்தவர் பூமியாள் வார்” என்று எண்ணங் கொண்டவனாய்க் கோபத்தை அடக்கிக்கொண்டான். இது தான் அறிவுடைமை. திருவள்ளுவரும் “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க, சீர்த்த இடத்து,” என்று கூறியிருக்கிறார் அல்லவா? அதாவது அடங்கிப்போக வேண்டிய இடத்துக் கொக்கு ஆதார-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/23&oldid=1323542" இலிருந்து மீள்விக்கப்பட்டது