உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றப்பன் சந்திப்பு 19

மாகிய பெரிய மீன் வரும்போது குத்திக் கொன்று தனக்கு ஆகாரமாக ஆக்கிக் கொள்கிறதோ, அது போல அடங்கி இருக்கவேண்டிய இடத்து அடக்கமாக இருந்து, காலமும் இடமும் தக்கபடி அமைந்த போது எதிரியை வெல்லவேண்டும் என்பதல்லவா?

அமலநாதன் மேல்மாடியை அடைந்து குறிப்பிட்ட பெட்டகத்தை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினன். வரும்போது வெகு எச்சரிக்கையாக வந்தமையால், யாதோர் ஆபத்துக்கும் உள்ளாகாமல் வந்து இறங்கினான். சிற்றப்பன் நாற்காலியில் அமரிக்கையாக அமர்ந்து இருந்தான் என்றாலும், அவனது முகத்தில் மட்டும் பயங்கரமான குறிப்புகள் தோற்றம் அளித்து நின்றன. தனனை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டுவது போல் அகத்து அழகை முகம் காட்டிவிடும் அல்வவா? “அடுத்தது காட்டும் பளிங்கு போல் கெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்பது பொய்யா மொழியன்றோ ?

அமலநாதனும் குறும்புக்காரன். அவன் தன் சிற்றப்பனுக்குப் பின்னால் வருவதைக் காணாமை வன்கண்ணன் ஏதேதோ நினைத்துக் கொண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டும் இருந்தமையாலும் இளைஞன் திடுமெனக் தட்டியவுடன் சிற்றப்பன் தரையில் குப்புற விழுந்தான். விழுந்தவன் எழவும் இயலாமல் அப்படியே மெய்மயங்கிக் கிடந்தான். இளைஞன் தன் சிற்றப்பனுக்கு மூச்சு இருககிறதோ இல்லையோ என்பதை அறிய மார்பில் கையை வைத்தும் பார்த்தான் அமலநாதன் திடுக்கிடும் நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/24&oldid=1323543" இலிருந்து மீள்விக்கப்பட்டது