பக்கம்:அமல நாதன்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமலநாதன்

ஒரு கத்தி அங்கு மறைவாக வைக்கப்ப்ட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து வன்கண்ணன் தன் சுவர் இனத்திற்கு வந்தான். வெந்த புண்ணில் வேல் அழ்ந்தாற்போலத் தன் சிற்றப்புனே நோக்கி ஏன் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறாய்? என்று, வினவினன் இந்த விைைவச் சிறுவன் எழுப்பக் கேட்ட வன்கண்ணன் திடுக்கிட்டுப் போனன். தான். அப்போது மிகுந்த களிேப்பாக இருப்பதால் ஒன்றும் உரையாடற்கில்லே என்றும் அடுத்த நாள் எதுவும், பேசிக் கொள்வோம்,' என்றும் கூறிச் சும்மா இருக்தான்.

3. கப்பல் வாழ்க்கை

அடுத்த நாள் காலையில் அமலநாதன் படுக்கையை விட்டு எழுந்தான். தன் சிற்றப்பனேத் தனக்குக் கீழ்ப்படியும் கிலேயில் கொண்டு வந்து விட்டதாகப் பகல் கனவு கண்டான். இனித் தன் சிற்றப்பனல் யாதொரு தீங்கும் செய்ய முடியாக நிலையில் முழுச் சுதந்தரத்துடனும், முழு செளகரியங்களுடனும் இனிது வாழலாம் என்று ஆகாயக் கோட்டை கட்டினான் காலை உணவும் அருத்தப்பட்டது. இந்நிலையில் பார்க்க ஒவ்வாதந்தையணிந்த பரிதாபத் தோற்ற முடைய ஒருவன் கதவினத் தட்டிக் கொண்டு கையில் ஒரு கடிதத்துடன் வந்து நின்றன். இவன் ஒரு சிற்ருள்; கப்பல் தலைவனிடம் வேலை செய்பவன். அவன். தன் பெயர் மாரியப்பன் என்பதையும் தான் தன் எஜமானன் வங்கநாதனிடமிருந்து கடிதம் கொண்டு வந்ததாகவும் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/25&oldid=1228775" இருந்து மீள்விக்கப்பட்டது