பக்கம்:அமல நாதன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல் வாழ்க்கை 27

மாரியப்பன் கோண்டுவந்த கடிதத்தை வன் கண்ணன் வாசித்தனன் அதில் யாதொரு ரகசி:மூன் இல்லாததனுல் அதன்ே அமலநாதனே வாசிக்கு : கொடுத்தனன் அமலநாதன் வாசித்ததில் கன்சிற்றப் பனுக்கு வெளியேசென்று வரவேண்டியவேலை.இருப் பதையும் உணர்ந்து கொண்டான். மேலும் அக்கடிதத் தில் வங்கநாதன் அன்றே துறைமுகத்தை விட்டுக் தன் கடற்பயணத்தை மேற்கொள்ள வேண்டி இரும்ப தால், தான் தன் நண்பனை வன்கண்ணனுக்கு எந்த உதவியை வேண்டுமானலும் செய்து தருவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் உணர்ந்துகொண்டிான்.

வன்கண்ணன் தான் தன் நண்பனை வங்க்கரத் னேக் காண வெளியே செல்லும் போது அமலநாதனே பும் உடன் அழைத்துக்கொண்டு வழக்கறிஞர் ஒருவ ரிடம் சென்று அவ்வழக்கறிஞர்மூலம் அமலநாதனுக்கு இருந்த ஐயம் அனைத்தையும் விளக்குவதாகக் கூறினன். அமலநாதனும் அத்ற்குச் சம்மதித்தான். தன்னே நடுவீதியில் எத்தகைய கொடிய தந்திரங்களைச் செய்து துன்புறுத்தவும் தன் சிற்றப்பல்ை இயலாது என்பதையும் உணர்ந்தான் அமலநாதன்.

இருவரும் வெளிக்கிளம்பிக் கப்பற் றுறைமுகத் தை மாடிச் சென்றனர். அங்குத்தான் வழக்கறிஞர் திரு. நல்லறிஞப்பிள்ளை இருப்பதாக அமலநாதனுக் குக் கூறி, வன்கண்ணன் அழைத்துச் சென்றன்.

முன்னே வன்கண்ணன் சென்று கொண்டிருக்க,

பின்னே மாரியப்பனும் அமலநாதனும் உரையாடிக் கொண்டு தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/26&oldid=687689" இலிருந்து மீள்விக்கப்பட்டது