பக்கம்:அமல நாதன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலனாதன். குறைந்து கிடக்கும் பாறைகளில் படாமலும் செல்லு

வேண்டும். இத்தகைய ஆபத்துக்களைக் கில்ே இல் வன் நன்கு அறிந்தவன் ஆதலின்;கப்ப8லடுேக்கிலிேல் நடத்தாமல் கரை ஓரமாகவே நடத்திச் சென்றன்.

இவர்கள் செல்லும்போது ஒருநாள் இரவு ஒரு சிறு படகு சிறிது தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றனர். அதில் சில் பிரயாணிகளும் இருந்தனர். உடனே கப்பல் தலைவன் தன் கப்பலில் உள்ள, ஆபத்துக் காலத்தில் பயன்படும். வண்ணம் வைக்கப்பட்ட படகுகளே இறக்கிப் பரவை யிடைப் பரதவிக்கும் மக்களைப் பாதுகாக்க ஓடினன். ஆனால், அதில் இருந்த எல்லோரையும் காப்பாற்ற முடியவில்லை. ஒருவனே மட்டும் காப்பாற்ற முடிந்தது. மற்றவர் யாவரும் மறிகடலில் மாய்ந்தனர்.

உயிர் தப்பியவன் நல்ல உடற்கட்டும், வன்மை யும் வாய்ந்த குட்டை வடிவினன். அம்மை வார்த்து ஆறிய முகத்தினன். அதனல், அம்மைத் தழும்புகள் முகத்தில் அமையப் பெற்றவன். கண்கள் நல்ல ஒளி யுடையனவாய் விளங்கின. அவன் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து நல்ல யோக்கியதையுடையவன் என் பகை அறிவித்துக் கொண்டான். அவன் பெயர் வாமனன் என்பது.

வாமனனும், வங்கானுேம் சிறிது உரையாடத் தொடங்கினர். இவர்கள் உரையாடலிலிருந்து வாமனன் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கட்சியைச் சார்ந்த வீரன் என்பதும் தன் எஜமானர் வாழும் இட் மாகிய காந்தளுர்ச்சாலைக்குச் சிறிது செல்வத்து:ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/37&oldid=687700" இலிருந்து மீள்விக்கப்பட்டது