உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நாவாய் முறிவு

கப்பல் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது; இருசகோதரர்களும் அக்காலத்து அரசியலைப்பற்றி யும் கட்சிகளின் கருத்துக்களின் வேறுபாட்டைப் பற்றியும் உரையாடத் தொடங்கினர். இந்தப் பேச்சி லிருந்து வாமனனது வாழ்க்கை வரலாறு கொனிக்க லாயிற்று. வாமனன் அந்த நிலையில் எப்படி இருக்கி முன் என்பதையும், இனி எவ்வாறு விளங்குவான் என்பதையும் விளக்கினன். அரசியலைப்பற்றிய புரட்சி களே இதுவரை அமல நாதன் கேட்டறியான். ஆக லின், வாமனனின் கூற்றுக்கள் அவனுக்கு ஒருவித உணர்ச்சியை ஊட்டுவனவாயின. வாமனன் அரசாங் கத்திற்கு எதிரான கட்சியைச் சார்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டான். வாமனன் குறும்பர் கட்சியைச் சார்ந்தவன். இக்குறும்பர்க்குக் கொங்கர் பகைவர். குறும்பர்கள் கொங்கர்களை அடக் கப் பல வழிகளில் முயன்றனர். குறும்பர்களின் தலைவன் காட்டில் மறைந்து வாழ்ந்தான். அவ்வாறு வாழ்வானே மீட்டும் அரியாதனத்தில் அமர்த்தி ஆட்சி செய்ய ஊக்கம் கொண்டனர் குறும்பர். இவர்கள் முயற்சிகள் அனைத்தும் முடிவு பெற்றில. அம்முயற்சி சூரியன் முன்னே பணிபோல் ஆயது. இதல்ை பெரி தும் சீற்றங்கொண்ட கொங்கர் இந்தக் குறும்பர் உயிரோடு இருப்பின் குறும்புகள் பலவும் செய்வர் என்று அவர்களே அடக்கி ஒடுக்கி ஆளத் தீர்மானித் தனர்; பல கொடுமைகளை இழைக்கத் தொடங்கினர் ; கொங்கர்கட்கு விரோதமாக கடந்த சிலருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/49&oldid=687712" இலிருந்து மீள்விக்கப்பட்டது