உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமல நாதன் தடித்த எழுத்துக்கள்

        1. அமல நாதன் புறப்பாடு

பால் காய்ச்சக் காய்ச்ச அதன் சுவை மிகுதிப்படுதல் போலவும், சங்கினேச்சுடச்சுட அது கருமை உருதது போலவும், வாழ்வில் துன்பத்தை அனுபவிக்க அனுபவிக்க அதன் முடிவு இன்பமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. இதன் பொருட்டே நம் முன்னேர்கள் துன்பம் உண்டேல் இன்பமுண்டு என்று கூறிவந்தனர். அதற்கு எடுத்துக்காட்டாகவே இவ்வாழ்க்கை வரலாறு அமைந்தது எனில், அது மிகையாகாது. இனி அந்த வரலாற்றைக் காண்போம்.

வெம்மை நிறைந்த வைகாசித்திங்களில்

 இன்றைக்குச் சற்றேறக்குறைய முந்தாறு ஆண்டுகளுக்கு முன் பதினெட்டாண்டுக்காளை ஒருவன்தான் பிறந்த அகம்விட்டு ஒரு பெரியவரைக் காணப் புறப்பட்டான். பெரியவர் பெயர் ஆபத்சகாயர் என்பது. காளையின் பெயர் அமல நாதன் என்பது. இவன் இளைஞன்     ஆதலின், தன்வாழ்வை நல்வழிப்படுத்துவதற்கு எவ்வெம் முறையில் கடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளவே, அப்பெரியாரைத் துணைக்கொண்டான். எவன் ஒருவன் பெரியவர்களது தொடர்பு கொள்கின்றானே, அவன் கேடுறுவதில்லை. கீழ் நிலையில் உள்ளவனும் மேல்நிலை அடைதற்கு இதுவே காரணம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/6&oldid=1228629" இலிருந்து மீள்விக்கப்பட்டது