பக்கம்:அமல நாதன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அமல சாதன

மீதிருந்த் படைஞன்மீது பாய்ந்ததால் சிறிது சோதி திற்கெல்லாம் அவன் கீழே விழுந்து இறந்தான்: இந்த நிகழ்ச்சி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் திடுக்கிடச் செய்தது. அவ்ர்களேத் துன்பக் கடிலில் ஆழ்த்தியது.

அமல நாதனும் இறக்கவனக் குறித்து இரக்கம் கொண்டு கொலைசெய்தவனைக் கண்டுபிடிக்க முனேங் கான். அவனுக்கு முன்னே சிறிது தூரத்தில் ஒரு பருத்த மனிதன் கருஞ்சட்டைஅணிந்த்வய்ைக் கையில் ஒரு பழைய துப்பாக்கியுடன் மறைவதைக் கண்ணுற். முன். அவனேக் கண்டதும் தன்னுடன் இருந்தவர் களே நோக்கி, அதோ! அதோ அந்தப் புதரில் கொலைஞன் மறைகிறன். வாருங்கள்! வாருங்கள் என்று அமல சாகன் முன்னே ஓடினன். ஆல்ை, அமல நாதனைப் பின்தொடர்ந்த குதிரைவீரர் முற்றி லும்பின்தொடராமல் ' தம்பி! நீ போகவேண்டாம் ; திரும்பிவிடு'என்றுகூறி அவனைத் தொடராது தடுத்த னர். இதனால் அமல நாதனுடைய வேகம் தடை பட்டுக் கொலைஞன் தப்புவதற்கு வழியாயிற்று.

குதிரை வீரர்களில் சிலர் அமல நாகன்மீதே சக் தேகம் கொள்ளலாயினர். இவன் அக்கொலைஞன் கூட்டத்தைச் சார்ந்த ஒருவனுக இருக்கவேண்டும் என்று எண்ணினர். அதனுல்தான் தம் குதிரை வீரனே நிறுத்திப் போக்கைத் தட்ைசெய்து மறைவில் இருந்து சுடுமாறு செய்தான் என்று யோசிக்கலா: யினர். அந்தோ பாவம் அமல நாதன் ஒரு பாவமும் அறியாதவன் பழியோரிடம் பாவம் ஓர் இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/67&oldid=687730" இலிருந்து மீள்விக்கப்பட்டது