பக்கம்:அமல நாதன்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zo அமல நாதன்

ன்ை. இப்படி முன்கூட்டி அரசாங்கத் துப்பறியும்: இல்ாகாவுக்கு அறிவித்துவிட்டால், தான் கொலைக்குக் காரணமானவன் என்று எண்ணும் ஐயம் தீர்ந்து விடும் என்பது தருமன் யோசனை. கொலை செய்த வன் வாமனன்தான் என்பதையும் பகிரங்கப்படுத்தி, வோமனனின் உருவமும், அவன் கூட்டாளியான அமல நாகனின் உருவமும் இரண்டும் அச்சடித்து வழங்கி இந்த அடையாளம் உள்ளவனேக் கண்டு பிடியுங்கள் என்று விளம்பரப்படுத்தப்போவதாகவும் கூறினன். கான் இப்படிச் செய்யாவிட்டாலும் துப்பறியும் இலா காவினர் எப்படியும் உம்மிருவர் உருவங்களையும் அச்சடித்து வெளியிடுவர் என்பதையும் அறிவித்தல் ன்ன். இதுவல்லவோ இராஜதந்திரம் என்பது ! கோழியும் திருடிவிட்டுக் கூடவும் குலாவுவதுபோல் என்னும் பழமொழியின் உண்மை தருமன் பேச்சி லிருந்து உணர்ந்து கொள்ளலாம் அல்லவா. இந்தத் தருணத்தில் குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட் டிஃலயும் ஆட்டிவிடுவதுபோல என்னும் பழமொழியை எண்ணியும் தருமன் செயலே ஆராயலாம். நிற்க,

தருமன் தன்னையும் தன் நண்பன் அமல நாதன் உருவத்தையும் வெளிப் படுத்துவதாகக் கூறிய மொழியை வாமனன் கேட்டுத் தன் உருவம் வெளிப் படுத்துவது குறித்துக் கான் சிறிதும் அஞ்சவில்லை என்றும், ஆல்ை தன் நண்பனை அமலநாதனின் உரு வத்தை வெளிப்படுத்துவது குறித்துமட்டும் கனக்குச் சம்மதம் இல்லை என்றும் அறிவித்தான். தன் நண்ப, னை அமல காதனை இவ்வாருன கொலைக் குற்றத்தில் ஈடுபடுத்த வாமனன் சிறிதும் விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/75&oldid=687738" இருந்து மீள்விக்கப்பட்டது