பக்கம்:அமல நாதன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமலநாதன்புறப்பாடு

                                        3.

தெரிந்திருந்தன. எனவே, தந்தையை இழந்த தனயன் ஆபத்சகாயரின் அருந்துணேயை கர்டுவானைன்; அவர் இல்லத்தை நோக்கிச் சென்றன். இவன் வருகையையும் அவர் நோக்கியே இருந்தார். அமல்நாதன் ஆபத்சகாயரைக் கண்டதும் இருவரும் கிராமத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றனர். இவர்கள் சென்ற் வழியின் இருபக்கமும் தொடர்மலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவ்வழியில் ஒரு பாறையின் மீது அமர்ந்தனர்.

அப்போது ஆபத்சகாயர் கம் அருமை நண்பரின் திருக்குமாரனை அமலநாதனுக்கு நல்லுரை கசில கூறலானார். அவை அவனது பிற்கால வாழ்விற்கு இன்றியமையாதனவாக இருந்தன. சிறுவன் கையில் ஒரு கடிதத்தை நீட்டி 'சிறுவா ! இந்தக் கடிதத்துடன் நீ உன் உறவினர் ஒருவரைக் காண வேண்டும். இஃது உன் தந்தையார் கொடுத்த கடிதமாகும் ;

அவ்உறவினர் உன் தந்தையாரின் இளைய சகோதரர். ஆகவே அவர் உன் சிற்றப்பன் ஆவார். அவர் பெயர் வன்கண்ணன் என்பது. அவர் நல்லூர் என்னும் இடத்தில் வாழ்பவர்,” என்று கூறிமுடித்தார். வன்கண்ணர் என்னும் பெயரையும், நல்லுர் என்னும் இடத்தையும் கேட்டதும் இளைஞனுக்கு முகத்தில் ஒர் இன்பக் குறி மின்னல் போல் தோன்றி மறைந்தது. ஏன்னெனில், இளைஞன் சின்னஞ்சிறுவன். மேலும் பதின்னெட்டாண்டு கிரம்பப்பெற்ற காளே. ஆகவே, தான். உணர்ச்சி உடையவன் என்பதை ஒளிக்க இயலது தான் இதுவரை யாரும் அற்ற அகாதி என்று நினைத்துதிருந்த எண்ணம் நீங்கிச் சிறிய தஙந்தையார் ஒருவன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/8&oldid=1228641" இலிருந்து மீள்விக்கப்பட்டது