பக்கம்:அமிர்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரளா ‘டிக்’ காக டிசஸ்செய்து ஒயிலுடன் ஹாலில் போய் அமர்ந்தாள். பாட்டு வேண்டு மென்றார்கள்.

      'கனவு கண்டதிலே...ஒருநாள் 
       கண்ணுக்குத் தோன்றமல் 
     இனம் விளங்கவில்லை-எவனே
       என்னகம் தொட்டுவிட்டான்.’ 

அனுபவித்து, ரசனே தள்ளப் பாடினுள் அவள். அவளுக்கு நிம்மதிகனிந்தது. அப்போது எவ்வளவு மனக்கோட்டைகள் கட்டினுள்? . . -

  ஆனால் இன்று......! 
  அவள் கண்கள் கண்ணீரைக் கக்கக் காத்திருந்தன. 
  ‘என்னகம் தொட்டு விட்டான்!’ .
  நினைத்தாள்; அவளிடமிருந்து நெடுமூச்சு வெளிப் போந்தது. 
  அவளிடம் காந்த இழைவு, மோகனச் சிரிப்பு, கலகல வெனும் பேச்சு எல்லாமிருந்தன; இருந்தும் சங்கரைப் பொறுத்தவரை அவளுள் ஏதோ ஒரு குறை-நிறை வின்மை காணப்பட்டதாக அவன் உணரலானுள்.
 அந்த ஒரு குறை? 

சரளா ஆக்கிரமித்திருக்கும் இடத்தில் தன் கனவுப் பதுமை சுத்தரி இருந்திருந்தால்...! அவன் செய்கை ஒவ்வொன்றிலும் தவறுது சுந்தரியின் தோற்றமே நிழலாடியது; ஊக்கம் தந்தது. அதே கணம் பித்தனுக்கிச் செயல் இழக்கவும் செய்தது. அவள் இன்ப நினைவை அவனால் துறக்கக் கூடவில்லைபோலும். என் இந்தச் சலனம்? ஏன் இந்தச் சபலம்? ஆமாம்; இதயத் குகையில் சுரங்கம் வைக்கப்பட்டிருக்கும் மனித உணர்ச்சிகளின் சலனத்திற்கும் சபலத்திற்கும் அளவு எது? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/14&oldid=1191566" இலிருந்து மீள்விக்கப்பட்டது