பக்கம்:அமிர்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரியின் திருமணத்துக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு ஓடியது, வீட்டார்களின் பூசலையும் மறந்து. இடைவேளைப் பிரிவின் பின் மீண்டும் அவள் ‘தரிசனம்’ கிடைக்குமல்லவா? .

என்ன தோன்றியதோ, சங்கரன் ஹாலினுள் பிரவே சித்தான். மின்சார வெளிச்சத்தில் அழைப்பு ஒன்று காணப்பட்டது. என்ன ஆச்சரியம்! தனக்கு வந்தது போன்ற அதே அழைப்பு. யார் அனுப்பினர்கள் ? அத்துடன் இணைத்திருந்த கடிதத்தைப் படித்தான். ‘சுந்தரம்’ என்று கையெழுத்திட்டிருந்தது. சரளாவைக் கட்டாயம் தன் மண விழாவிற்கு வரக் கோரியிருந்தது கடிதம், யார் இந்தச் சுந்தரம்? விஷயத்தின் முதல் கணே இது.

அடுத்து ஒரு கடிதம் இருந்தது. அது சரளாவின் கைப்பட எழுதியிருந்தது. அத்தான்,
தங்கள் கடிதம், பத்திரிகை கிடைத்தன. தங்கள் கலியானத்துக்கு வா. இயலாத நிலையிலிருக்கிறேன். அந்த நாளில் என்மீது கொண்ட அன்பில் என்ன அழைத்திருக்கிறீர்கள். ஆளுல், இன்றைய என் நிலை வேறு. நான் என் கைப்பிடித்த கணவரின் கட்டளைக்கு அடிபணிய வேண்டியவள், நெருப்பும் பஞ்சும் தோழமை கொள்ளக்கூடுமா? ஆம் இன்றைய என் நிலைஅது. ஆனுல் தங்கள் கடிதத்தைக் கண்டால்கூட என்ன நினைப்பாரோ அவர்’ என்று அஞ்சுகிறேன். ரயில் நட்புப். போல என்னேயும் மறந்துவிடுங்கள். நான் அவர் உயிர்த்துகின. அவர்தான் என் லட்சியம். அவர் நினைவு ஒன்றே என் உயிர், பலம், ஊக்கம் அனைத்தும். மன்னியுங்கள்.
                                                                 சரளா,

தன் மனைவி எழுதியிருக்கும் கடிதத்தைக் கண்ணேட்ட மிட்ட சங்கரனுக்கு நெஞ்சு மலேயாய்க் கனத்தது.‘தன்னே மணந்த கணவன்தான் சகலமும் என்ற உயரிய பண் பாட்டை உள்ளடக்கி எழுதின அவ்வழிகளைக் கண்டதும் வாழ்க்கையின் உண்மை பளிச்சிட்டது, காாிருளில் தோன்றும் மின்னலென.

  அவன் இதய அந்தரங்கம் பேசியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/15&oldid=1191674" இலிருந்து மீள்விக்கப்பட்டது