பக்கம்:அமிர்தம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


” அந்நியர் கல்யாணத்துக்குப் போக வேண்டு மென்றால் எதாகிலும் நான் கினைத்துக்கொள்வேன் என்று தானே சாளா இப்படி எழுதியிருக்கின்றாள் மனைவி என்ற வரம்பிற்கு உட்பட்டாள் அவள். அதே போலத் தானே நானும் சுந்தரியின் கினேவில் அவளேக் காணத் துடித்தது எத்துணை துரோக்ம் ? நாளே சுந்தரி இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட வேண்டியவளன் ருே அவள் கினை வில் பித்தாகி, பித்தனகிச் சாளாவை-அவள் அன்பை கிரா கரித்தது எவ்வளவு மன்னிக்கமுடியாத குற்றம் ஆம; சாளா என் உயிர்த்துணை; அவள் புடமிட்ட பொன்!”

மனச்சாட்சி அவனே என்னவோ செய்தது. மனைவி’ என்ற ஸ்தானம் அப்பொழுது தான் சங்கசனுக்குப் புரிந்தது. அதேகணம் தன் கலியாணத்துக்கு எழுத்தாள நண்பர் ஒருவர் அனுப்பிய க்ரீட்டிங்க்ஸ் வாசகத்தையும் சிந்தித்தான்.

  • வாழ்க்கை ஒர் முள் படுக்கை என்கிறார்கள் ! ஆளுல் அது ஒர் அழகிய மலர்ப்படுக்கை. ஆம்; அது சுகமாக விருக்கும்; ஹாயாக இருக்கும்-உணரும் விதத்தில், புரிந்து கொள்ளும் விதத்தில், அனுபவிக்கும் விதத்தில். வாழ்க்கை ஒர் இன்பரோஜா ; இளந் தென்றல்; தேகிலவு.” தத்துவ ரீதியில் எழுதியிருந்த அவ்வரிகள் சங்கர அணுக்கு நன்முகப் புரிந்தன. அவன் வாழ்க்கையைப் புரிந்து

கொண்டான். சாளாவையும் புரிந்துகொண்டான்!

சளா படுத்திருந்தாள். சங்கான் மெல்ல அண்டினன். பள்ளியறை என்ற பாத்தியதையுடன் கிடந்த அவளது மேலாடை நழுவிக்கிடந்தது. நெருங்கிச் சரளா என்றான். அவன் குரல் கேட்டதுதான் தாமதம். உடையைச் சரிப் படுத்திவிட்டு வாரிச் சுருட்டிச் சாளா எழுந்தாள். கண்களி லிருந்து கண்ணிர் ஓடியத். அப்படி யென்றால் இன்னமும் அவள் உறங்கவில்லையா? - - சரளா கணவனே கிமிர்ந்து பார்த்தாள். அந்த முகத்தில் என்றுமில்லாத அமைதி படர்ந்திருந்ததைக் கண்ட் அவள் அமைதி பெற்றாள்; அதிசயமுற்றாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/16&oldid=616736" இருந்து மீள்விக்கப்பட்டது