பக்கம்:அமிர்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஷமும் அமிர்தமும் பாற்கடலில் தோன்று மென்பது கதை. ஆணுல் அவை இரண்டுமே மனித இதயத்தில் உருப்பெறும்போது......

கோதையின் கேள்வி


அந்தக் கேள்வி திரும்பத் திரும்பக் காவேரியின் இதய அடிவாரத்தில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட கேள்வியை அச்சமயம் அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்றாே ஒரு நாள், அதாவது விபரம் புரிந்த உணர்வின் துாண்டுதலால் அத்தகைய விஞ ஒன்று தன் குழந்தை வாயினின்றும் வெளிக் கிளம்பும் என்று நினைத்ததுமட்டும் உண்மை. கடைசியில் குழந்தை சற்றும் எதிர்பாராத சமயத்தில் அதைக் கேட்டுவிட்டாள்.

மத்தியானம் வேலை முடிந்ததும், சுடுசோறு வடித்தாள். வடித்தவுடன் ‘சுடச் சுட’ தட்டில் பிசைந்து மகளுக்கு ஊட்ட உட்கார்ந்தாள் காவேரி. குழந்தையின் மனம் எங்கு அலேந்ததோ? பிடித்த சோற்றுக் கவளத்தை உண்ணக்கூட நினைவின்றி, எடுத்த எடுப்பிலேயே அந்தக் கேள்வியைக் கேட்டது.
‘அம்மா, கோடி வீட்டு மணிக்கு நிதமும் அவன் அப்பர் ரொட்டி, மிட்டாய் எல்லாம் வாங்கிவந்து கொடுக்கிறரே! எனக்கு மட்டும் அப்படி வாங்கித்தா அப்பாவைக் காணுேமே. எங்கே என் அப்பா? ஊ...ம்...சொல்லு...” 

அவள் திடுக்கிட்டாள். பச்சைக் குழந்தைக்கு என்ன சமாதானம் சொல்ல இருக்கிறது ? உள்ளெழுந்த சலனத்தை அடக்கிக்கொண்டாள்.

“கோதை, நீ என் கண்ணில்லையா ? அப்பா பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறர். வந்ததும் பொம்மை.17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/19&oldid=1193952" இலிருந்து மீள்விக்கப்பட்டது