பக்கம்:அமிர்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புவன வாய் திறந்து பேசமுடியாது. அதற்கு வட்டியும் முதலுமாக அவள் விழிகள் பேசுமே? குறுநகையை ஒளித்து வைக்கும் சிமிழ் உதடுகள் ஆயிரம் இன்பக் கதைகள் பேசுமே:

                        மோகினி


கையில் பிரித்து வைத்திருந்த திருமண அழைப்பைப் படித்து முடித்த சுந்தரேசனுக்கு ஆச்சர்யமும் அனுதாபமும் மாறி மாறி உண்டாயிற்று. விசுவநாதன் என்ற பெயருடன் ஒட்டியிருந்த பி.ஏ.என்ற இரண்டு எழுத்துக்கள் அவன் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. மணமகள் புவன ; அவளே மட்டுமே அவனுக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் ஜோடி சேர்க்க இருக்கும் விதியைப்பற்றிக் கொஞ்ச நேரமாகிலும் அவனுல் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பி. ஏ. படித்துவிட்டு, இருந்திருந்து இந்த ஊமைப் பெண்ணைத்தானு கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்? ஒருவேளை இத்தகைய சதிக்கு அவனுடைய வறுமைதான் காரணமாக இருக்குமோ? இதை நினைக்கவே, சுந்தரேசனுக்கு மர்ப்பிள்ளையாக வரப்போகும் விசுவநாதன் பேரில் அளவுகடந்த இசக்கம் ஏற்பட்டது. .

அவன் புவனவை ஒரிரண்டு சந்தர்ப்பங்களில் பார்க் திருக்கிருன். விதிவசமாக ஊமை என்ற ஒரு குறையைத் தவிாமற்றப்படி அழகில் அவள் எ ஒன்! . ஏதோ சொற்ப காலம் பரிச்சயம் ஏற்பட்ட தன்னை ஞாபகம் வைத்த அழைப்பு அனுப்பியுள்ள சுவாமிநாதய்ய ருக்காக வேண்டி, அவர் பெண் கல்யாணத்திற்கு எப்படியும் போய்த்தான் ஆகவேண்டுமென்று முடிவு கட்டினன் சுந்தரேசன்.

23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/25&oldid=1195358" இலிருந்து மீள்விக்கப்பட்டது