பக்கம்:அமிர்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொன்ன பொய்யை உணர்ந்தேன். என்றே விளையாட்டாகச் சொல்லப் போக, அதை அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வீர்களென்று நான் நினைக்கவே யில்லே. புவன ஊமையல்ல. அன்று முதன்முதலில் அவளைக் கண்டபோது. நீங்கள் பார்த்த பார்வையைக் கொண்டு எங்கே அக்காள்மீது காதல் கிதல் கொண்டுவிடுவீர்களோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தது என் மனம். அவள் நினைவில் அப்புறம் உங்கள் மனம் வினுக அலைபாய நேரிடுமே என்ற அச்சம்| ஏன் தெரியுமா? அக்காள் எங்கள் அம்மாஞ்சிக்காகவே ‘ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்தான். அதற்காகவே, அதுவும் உங்கள் சொந்த கலனே உத்தேசித்து அவ்விகம் ஒரு பொய்யைக் கற்பித்துக் கூற நேர்ந்தது. அவள் ஊமை என்று நான் சொன்னதற்குச் சரியாக அன்று அவளுக்கு அசாத்தியமான பல்வலி. வாயைத் திறக்கவே முடியவில்லை. என்னைப் பிடித்த நல்லகாலம், அடுத்த நாளே உங்களை மாற்றி விட்டார்கள். மறுதினம் நீங்கள் வீட்டில் இருந்திருந்தால் என் ‘குட்டு’ வெளிப் பட்டிருக்குமோ, என்னவோ?

விளையாட்டாகச் செய்த குற்றம் நியாயத்தை நிர்ணயித்து என்னே மன்னிப்பது உங்கள் பொறுப்பு. 

மறந்துவிட்டேன். எங்கள் அம்மாஞ்சி யார் தெரியுமா ? அவர்தான் இந்த விசுவநாதன்.

                                                        இப்படிக்கு 

மீனுவின் குறும்புத்தனத்தைக் கண்ட அவனுக்குச் சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அந்த கணம் மீனு ஒரு புதிர் போலக் காட்சியளித்தாள் சுந்தரேசனுக்கு விதியின் ஆடலரங்கிலே மோகினி போலப் பல்வேறு உருவங்களில் தோன்றி மறையும் மீனுவை அவன் எப்படி மறப்பான்?

பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த சுந்தரேசனைக் கண்டு சுவாமிநாதய்யர் திகிலடைந்தார்.
“மிஸ்டர் சுந்தரேசன், என்ன அதற்குள் ஊருக்குப் புறப்பட்டுவிட்டீர்கள்? மீனு சொன்னுள்; ஒடோடி வந்தேன். முதலில் இன்றைக்கே இன்னும் ஒரு வார லிவுக்கு எழுதிப் போடுங்கள். 
“ உங்களிடம் என்றைக்கோ சொல்லியிருக்க வேண்டிய விஷயம் இன்றுதான் கேரில் கூறச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த நாளில்-அதாவது வாலிப வயதில் —எனக்கும் உங்கள் அம்மா சாசுவுக்கும் கல்யாணம் செய்து வைப்பது என்று நிச்சயித்திருந்தார்கள் எங்கள் பெற்றாோ்
28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/30&oldid=1195418" இலிருந்து மீள்விக்கப்பட்டது