பக்கம்:அமிர்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘கருணே பொழியும் கடல்‘ கிய அந்த ஜகன் மாதாவா கருணையின்றி ‘கொடை’ கேட்கிறாள்? கோழி தன்குஞ்சை எங்ஙனம் தின்ன விழையும்?

                       பலியா?

“ஏவிலே வடிவு, அடுத்த கிழமைக்குப் பொங்கலுக்குப் புறப்பட்டு வரச்சொல்லி உன் மச்சானுக்கு கடுதாசி போடறதுதானே”

“தபால்போட்டு நாலு நாள் ஆகப்போகுது. பொங்கலோடு காளி கோயில் திருவிழாவையும் பார்க்கவேணுமா, அப்பா. அநேகமா இன்னிக்கு நாளேக்கு அவங்க வருற விபத்துக்குத் தகவல் எழுதுவாங்க”  .
 
அவள் குரலில் மிதமிஞ்சிய ஆனந்தம் சுரந்தது. தன், கணவனுக்குக் கடிதம் போட்டு வரவழைப்பதில் தந்தையின் கட்டளைக்கு முந்திக்கொண்டதில் ஏனே ஒர்வகை வெட்கம் அவளேப் பற்றியது. ,
அதே சமயம் “அக்கா இந்தப் பாரு” என்று ஒடி வந்த அவள் தங்கை, தபால் ஒன்றை வடிவழகியிடம் நீட்டினுள்.
“அப்பா, மச்சான் கட்டாயம் வத்திடுமாம். தேரோட்.டம் கட்டாயம் பார்க்க வேணுமாம்.”
கணவனைப் பார்க்கும் பூரிப்பில் உருப்பெற்ற கனவு மயக்கம் அவள் வதனத் திசையில் அழகாக வரிக் கோடிட்டது. 

“சபாசு வடிவு. ஊம் அப்படியான, மாப்பிள்ளைக்கு - விருந்து பண்ண இப்பதொட்டே தயார்ப்படுத்த வேண்டி யதுதாகுக்கும்.”

30
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/32&oldid=1195440" இலிருந்து மீள்விக்கப்பட்டது