இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வடிவழகி-அவள் கணவன் வீரப்பன் இருவரும் ஜோடிப் புருக்கள். அவர்களிரண்டு பேர்களும் கைபிடித்த வாழ்க்கைத் துணேவர்களானது இருக்கின்றது. பாருங்கள், அது ஒரு அதிசயமான கதை, உண்மை நிகழ்ச்சி !
★
வடிவழகி, வீரபனுக்கு வாழ்க்கைப்பட வேண்டியமுறை. அவள் தன் அத்தானின் காம்பற்றப் பொன்னை சந்தர்ப் பத்துக்குக் காக்கிருந்தாள். ஆனால் வீரப்பன் அவளைப் பற்றிக் கொஞ்சமும் அக்கரைப்பட்டவனுகத் தெரியவில்லை. அவள் செயலற்றாள். அவள் கவலை. சந்தை சுப்பன் சேர்வை யைத் தினற வடித்தது. பருவமடைந்த வடிவை வீரப்பனிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்று சேர்வை ஆசை ஆசையாக விருந்தான்.
வடிவழகி ! பெயரின் எழில் அவள் வடிவத்தில் எதிரொளி வீசிற்று; காடடில் பூத்த ரோஜா அவள். பருவம் அவள் அழகிற்கு முலாம் பூசியது. போதை நிறைந்த புன்னகையில் மின்னும் காந்தக் கவர்ச்சி அவள் அழகை மிகைப்படுத்தியது. எல்லாம் பொருந்தியிருந்தும் வீசப்பன், வடிவழகியிடம் இப்படிப் பராமுகமாகத்தான் இருந்தான். வீரப்பனுக்கும வடிவழகிக்கும் முடிச்சுப் போட்டுவிட வேண்டுமென்ற கவலையில் நாட்களை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருக்க இரண்டுதரப்புப் பெற்றாேர்களும் அப்படியே கதிகலங்கிப் போகும்வண்ணம் வாய்த்தது வீரப்பனுடைய விபரீத முடிவு. அவன் மனமாற்றத்தைக் கேள்விப்பட்ட ஊரார்கள் ஒருகணம் வாயில் விரலைவைத்து ஆச்சரியப்படத்தான் செய்தார்கள். தன் மச்சானின் தீர்மானத்தை அறிந்த வடிவு மன மிடிந்தாள்; அழுகாள்; புலம்பினள். ஆசை அத்தானோடு அழகாக நடத்தப்போகும் இன்ப வாழ்க்கையைப்பற்றி எவ்வளவு எவ்வள்வு எண்ணங்கள் எண்ணியிருக்தாள்!”