பக்கம்:அமிர்தம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காஞ்சனவின் வீட்டில் மலர் மணம் எங்கும் பரவி யிருந்தது. குழல் ஊதி லீலைகள் செய்த மாயக்கண்ண னின் படம் ஒருபுறம்; மற்றாெரு பக்கம் கால்மாறி நடம் புரிந்த நடராஜமூர்த்தியின் திருவுருவம்! இரண்டிற்கும் நவிேல் அஹிம்சையின் திருஉரு-தியாகத்தின் சின்னம்அமரவாழ்வெய்திய அண்னல் காந்தி மகாத்மாவின் மோகன பிம்பம் தீபஒளியாகப் பரிணமித்தது.

அறையின் மத்தியில் வீற்றிருந்த சுந்தாத்தின் கவனம் காற்புறமும் சுழன்றாேடி நிலைத்தது. -

சகலகலாவல்லி போலக் காட்சியளித்தாள் காஞ்சன, கையில் வீணையுடன். வீணையின் நரம்புகளை மெதுவாக மீட்டி ஜீவநாதத்தைத் தட்டி எழுப்பினுள். அவளது வீனகானத்தில் லயித்த அவர், அவளே கிமிர்ந்து நோக்கின சமயம், ஒருகணம் அவர் மனம் சஞ்சலித்துவிட்டது.

காணிக் கண்புதைத்த வண்ணம் எழுந்து சென்றாள் பூத்துக் குலுங்கும் கொடி போன்ற அக்கட்டழகி. ஒய்யாச மான அவள் உருவத்தின் ஒவ்வொரு அங்க அமைப்பிலும் இளமை கொந்தளித்தது.

அவளது முகச் சாயலிலே ஒருவிதக் கவர்ச்சி; அந்த வசீகரத்தில் ஒரு குளுமை ! பிடியிலடங்கும் இடை; கொடிமாதிரித் துவளும் மெல்லுடல். மெல்லிய கீற்றுப் போன்ற இதழ்களிலே முறுவல் ஊறும்போதெல்லாம் குழி விழும் சோஜா கிறக் கன்னங்கள். நீண்ட புருவத்தின் கீழ் இருட் கனலெனத் திகழும் விழிகள்:

அந்த அழகியின் வனப்பில் சுந்தாம் மயங்கியதில் ஆச்சரியமென்ன? -

முகூர்த்தம் நிச்சயமாகித் திருமணமும் நடந்தேறியது. சாயந்தாம் ஆனவுடன் காஞ்சன’ என்று தேன் குரலில் அழைத்துக்கொண்டே உள்ளே நுழையும் சமயம் அவளும் த்ன் பதியின் வாவை எதிர்பார்த்து நின்று காண்டிருப்பாள், வசந்தத்தின் வாவை எதிர்கொண் டழைக்கும் வானம்பாடியைப் போல. சுந்தாத்தின்

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/43&oldid=616793" இருந்து மீள்விக்கப்பட்டது