பக்கம்:அமிர்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்று நடுநிசி. குழந்தையைப் படுக்க வைத்துவிட்டுச் சிறிதுநோம் புத்தகம் படிப்பதில் முனைந்திருந்தார் சுந்தரம்.

“டாக்டர் ஐயா!”

அந்த அறிமுகமற்ற குரலில் வருத்தத்தின் சாயல் தெரிந்தது.

வெளியே சென்று பார்த்தார். பெரியவர் ஒருவர் படபடக்க ஓடிவந்த களைப்புடன் செய்தியைச் சொன்னார்.

டாக்டர் சுந்தரம் உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார். ஒர் பெண் கட்டிலில் உணர்வு தப்பிப் படுத்திருந்தாள். ‘ஸ்டெத்தாஸ்கோப்’ கொண்டு பரிசோதிக்கக் குனிந்தார். அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார் டாக்டர். ஏனென்றால் அந்தப் பெண், காஞ்சனாவை அப்படியே உருக்கிவைத்தாற் போலக் காணப்பட்டாள்!

அவ்வுருவத்தைக் கண்டதுமுதல் அர்த்தமற்ற ஒருவித அனுதாபம், வாத்சல்யம் ஏனோ அவரையும் அறியாமல் கிளர்ந்தெழுந்தன!

நான்கு நாள் கழித்து அந்த யுவதி ஆஸ்பத்திரியிலிருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட சமயம் கண்கள் கலங்க அவளை வழியனுப்பி வைத்தார் அவர்.

“லலிதா, என்னை உடனே புறப்பட்டு வரும்படி அத்தை இன்று தந்தி கொடுத்திருக்கிறார். கண்ணம்மாவை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்” என்று தன் சகோதரியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் டாக்டர் சுந்தரம்.

அத்தை வீட்டையடைந்ததும் வரவேற்பு உபசாரம் பலமாக கடந்து முடிந்தது.

“அத்தை, ஒன்றும் விசேஷம் கிடையாதே. தந்தியைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்து போய் விட்டேன்.”

“சுந்தரம், தந்தி கொடுத்திராவிட்டால் இல்வளவு எளிதில் உன்னை இங்கே வரவழைத்திருக்க முடியுமா? காஞ்சனா இறந்ததற்கப்புறம்தான் நீ இங்கு வரவில்லையே.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/45&oldid=1313537" இலிருந்து மீள்விக்கப்பட்டது