பக்கம்:அமிர்தம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எத்தனே நாளேக்குத்தான் இப்படிக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருக்கப் போவதாக உத்தேசம், கையில் ஒரு பச்சைக்குழந்தையை வை த்துக்கொண்டு பெரிய பிள்ளைக்கு அதிகமாக நான் எதைச் சொல்ல இருக்கிறது?” ‘அத்தை, நான் என்ன யோசிக்க, இருக்கிறது? காஞ்சன மாதிரி இனிமேல் இந்தப் பிறவியிலா எனக்கு ஒரு பெண் மனைவியாக வாய்க்கப் போகிருள் ? ஊஹ-ம். ஒருக்காலும் இருக்காது. எதோ விட்டகுறை, தொட்ட குறை என்பார்களே, அந்தமாதிரிதான் எங்கள் திருமணம் முன்னர் நடந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்...”

டாக்டரின் பேச்சிற்குச் சோகம் சுருதி கூட்டிற்று. * சுந்தரம், தேரடித்தெரு சோமுபிள்ளையின் சொந்தக் காப் பெண்ணும். பர்மாவிலிருந்து வந்திருக்கிருள். முதன் முதலில் அவளேக் கண்டதும் அப்படியே திகைத்துவிட் டேன். அப்படியே உன் பெண்டாட்டி போல ஒரே அச்சு. நல்ல பதவிசு. நீ ஊம் என்றால் போதும். காரியம் முடிந்தமாதிரிதான். மேலும், கைக்குழந்தைக்கு நல்ல ஆதரவாயிற்று. அதன் நன்மையை உத்தேசித்தாகிலும் சம்மதம் கொடு, அப்பா.’ . இவ்விதம் முகாந்தரங்கள் பலவற்றை எடுத்துக்காட்டி, அதற்கு அத்தாட்சிபோல அப்பெண் போட்டோவையும் அவரிடம் நீட்டினுள்.

படத்தைப் பார்த்தமும் அப்படியே கின்றுவிட்டார். டாக்டர், ஏனென்றால், அதே பெண்தான் சில் தினங் களுக்கு முன்பு அவரிடம் வைத்தியம் செய்துகொண்ட் யுவதி. தின்னேயும் அறியாமல் அந்தப் பெண்மீது உண் டான அன்பின் காரணம் இப்பொழுதுதான் அவருக்குப் புலப்பட்டது. . . . . . . . .” - -

அத்தை, இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து

கொள்ள இஷ்டமா என்று கேட்டீர்களா பெண்ணிடம்?”

“எல்லாம் கேட்டாய்விட்டது. இதன்மூலம் எழைக்

குடும்பத்திற்கும் ரொம்பவும் ஒத்தாசை செய்ததுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/46&oldid=616798" இருந்து மீள்விக்கப்பட்டது