பக்கம்:அமிர்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“புதியவள் வந்துவிட்டால் அப்புறம் கண்ணம்மாவை நன்றாகப் பேணி வளர்ப்பாள்.”-இந்த ஒரே ஆசையுடன் மனத்தைச் சாந்தியுறச் செய்துகொண்டு அவர் தன் அத்தையிடம் விடைபெற்று வீடு வந்தடைந்ததும், அவரது நெஞ்சம் பிளந்துவிடும் போலாய்விட்டது. எங்கும் ஒரே அந்தகாரம்; மோன அமைதி! திடீரென்று அலறல் சப்தம் கேட்கத் திரும்பினார் டாக்டர்.

“அண்ணா, கண்ணம்மா போய்விட்டாள் அண்ணா. இன்று காலையில் குளித்துவிட்டுத் திரும்பும் சமயம் குழந்தை தண்ணீர்த் தொட்டியில் தவறிவிழுந்து இறந்து கிடந்தது, அண்ணா” என்று நினைவிழந்து, நெஞ்சம் விம்மத் தேம்பித் தேம்பி அழுதாள் லலிதா.

தன் குழந்தையை நீர் மல்கும் கண்களுடன் எறிட்டு நோக்கினார். கண்ணம்மா ஆனந்தப்பள்ளி கொண்டிருந்தாள். டாக்டர் அழுதார்; புரண்டார். பைத்தியம் பிடித்து விடாதது ஒன்றுதான் பாக்கி. தன் அருமைக் கண்மணிக்காக வாங்கிவந்த பிஸ்கட்டுகள், விளையாட்டுச் சாமான்கள் இவையனைத்தும் சிதறிக்கிடந்தன, அவரது மனம்போல.

என்னதான் வாழ்க்கை வேண்டிக் கிடக்கின்றது? அவரது வாழ்விலே சாந்தி, இன்பம் என்பனவெல்லாம் தாமரை இலையில் ஒளிரும் நீர்த்திவலைகள் தாமா? ஆமாம்; மனிதன் வகுக்கும் திட்டங்களை - கட்டும் மனமாளிகை களைத் தகர்த்தெறியத்தான் 'விதி' குறுக்கிட்டுவிடுகிறதே! விதி ! நல்ல விதி !

அதே தினம் டாக்டரிடமிருந்து அவர் அத்தைக்கு. ‘ரிஜிஸ்தர்’ தபால் ஒன்று பறந்து சென்றது.

அத்தை.

இத்தனை காலம் எந்த ஒரே லட்சியத்திற்காக எனது உயிர் காஞ்சனா இறந்ததையும் பொருட்படுத்தாமல் என் உடலில் தங்கியிருந்ததோ, எந்த ஒரே குறிக்கோளைக் காப்பாற்ற உங்களது பிடிவாதத்தின் துணைகொண்டு மறுமணம் புரிந்து, கொள்ளச் சம்மதித்தேனே அந்த லட்சியம் சிதைந்துவிட்டது! என் கண்மணி

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/47&oldid=1313466" இலிருந்து மீள்விக்கப்பட்டது