பக்கம்:அமிர்தம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கண்ணம்மா இன்று இறந்துவிட்டாள் என் கண்ணேச்சிராட்டிப் பேணிப் போஜிக் கத்தானே மறுகல்யாணம் செய்துகொள்ள இருந்தேன். இனி எதற்கு இந்தக் * கட்டை ‘க்குக் கல்யாணம் !

பெண்வீட்டில் விஷயத்தைத் தெரியப்படுத்துங்கள். பாவம், ரொம்பவும் ஏழைக்குடும்பம். பெண் தங்கமான குணம். சேற்றில் முளைத்த செந்தாமரை! இத்துடன் அனுப்பியிருக்கும் ரூ. 500 செக்கை மாற்றி, நல்ல மாப்பிள்ளையாகத் தேடித் தாங்களே நேரில் இருந்து அப் பெண்ணுக்குக் கல்யாணத்திற்கு ஆயத்தம் செய்யுங்கள் இதுவேதான் என கடைசி வேண்டுகோள் !

சுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/48&oldid=616803" இருந்து மீள்விக்கப்பட்டது