பக்கம்:அமிர்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீட்டாட்டத்தை நாடமாட்டான் என்பதை உணர்ந்து கொண்டு, தங்கவேல்தான் இப்படிப்பட்ட நாடகத்தை நடத்தியிருக்கிறான் என்ற ரகசியம் பொன்னுருவிக்கோ, அல்லது காசிலிங்கத்திற்கோ எப்படித் தெரிந்திருக்க முடியும்?

மறுபேச்சின்றித் நாணாக்காரன் போய்விட்டான். பொன்னுருவி கண்ணிரைத் துடைத்துக்கொண்டு நிம்மதியடைந்தாள். மறுபிறவி எடுத்தவன்போல, ஒரே எட்டில் பாய்ந்து தன் குழந்தையை வாரியெடுத்து மடியில் வைத்த வண்ணம் தேம்பினான் காசிலிங்கம்.

“பொன்னுருவி, இந்த மட்டும் ஆயா கண் திறந்திச்சே, அதுவே நம்ப செஞ்ச பாக்கியம்தான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி, போலீசு கையிலே சிக்காமல் தப்பிச்சிட்டேன். தங்கவேலை உசிருள்ள வரை மறக்க முடியுமா? பொன்னுருவி, நீ என்னே மன்னிச்சிடு! குடிகாரன் கணக்காக உன் கழுத்துத் தாலியைக் கூட அறுத்துக்கிட்டுப் போய்க் கடைசியா ராத்திரி அதையும் தோத்துப்பிட்டேன். காலம்பற வள்ளிகிட்டப் போய், மகளுக்கு வைத்தியத்துக்கின்னு பொய் சொல்லி அஞ்சு ரூபாயை வாங்கிச் சீட்டு ஆடினேன். கடைசியா எனக்குக் கெலிப்பு வந்துச்சு. பணம் கொஞ்சம் கைக்கு வந்ததும் அந்தத் தாலியைத் திருப்பிட்டேன்!” என்று உணர்ச்சி மேலிடக் கூறி, துணியில் முடிந்து வைத்திருந்த தாலியைக் கொடுத்தான் தன் மனைவியிடம்.

இதைக் கேட்டதும் தங்கவேல் பொன்னுருவியின் கழுத்தைப் பார்த்தான். மங்கலச் சின்னம் பரிணமிக்க வேண்டிய கழுத்து சூனியமாகத் தோற்றமளித்தது. தங்கவேல் கற்சிலையாய்க் சமைந்து நின்றான். தன் கணவனின் இஷ்டம் நிறைவேறிவிட்டால் அதுவே போதும் என்ற கொள்கையுடைய பொன்னுருவியின் மனப்போக்கை நினைத்து மலைத்தான் அவன். அதே தருணம் காசிலிங்கத்தின் அடாத செயலைக் கண்டு பொருமியது அவன்

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/56&oldid=1310397" இலிருந்து மீள்விக்கப்பட்டது