பக்கம்:அமிர்தம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளம். என்றாலும், இனியாவது அவன் வாழ்க்கைச் சுவடியில் புதி எடு புரட்டப் பெற்று, பொன்னுருவி, குழந்தை சகிதம் இன்ப வாழ்வு தொடங்குவாளல்லவா என்ற எண்ணம் உதித்தது. உடனே அவனுக்கு கிற்கிருேமா அல்லது பறக்கிருேமா என்ற சந்தேகம் உண்டாகிவிட்டது. அவ்வளவு மகிழ்ச்சி!

‘பொன்னுருவி, இனிக் கவலைப்படாதே! காசி மச் சான் திருந்திடுச்சு. எல்லாம் மகமாயி கடாட்சத்தான். அத் தோடே மலைபோல வந்ததெல்லாம் பணிபோல மாறினதும் உன் தாவி பாக்கியம்தான் - என்று கனிவுடன் வார்த் தைகள் உதிர்த்தான் தங்கவேல்.

நன்றி நிறைந்த பார்வையுடன் தன் அத்தானே எறிட்டு விழித்த வண்ணம், கையில் வைத்திருந்த தரவியை எடுத்துத் கண்ணில் ஒற்றிக்கொண்டு கழுத்தில் அணிந்துகொண்டாள் அவள். மறுமலர்ச்சி பெற்ற பொன்னுருவியின் வதனத்தில் புது வாழ்வின் பூரிப்பு வலை பின்னியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/57&oldid=616822" இருந்து மீள்விக்கப்பட்டது