பக்கம்:அமிர்தம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எழுதப்படும் கதைகளில் ரஸ்பேதம் இருக்கலாம். ஆனல் ஆற்றைப் படி ப்பஆர்கள் வாரும் 感 தாற்ற மாட்டார்கள் ; பதலாகப பாராட்டவே செய்வார்கள்.

செயற்கைப் பிரசவத்துக்குள்ள மதிப்பு இது.

இந்த வகையைச் சேர்ந்தவர் நண்பர் ஆறுமுகம் அவர்கள். எவருடைய உள்ளத்தையும் புண்படுத்தாமல் அவர் இதுவரை இலக்கிய இலக்கண மரபையொட்டி எத் தனேயோ கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய கதைக יין அனேத்தும் வாழ்க்கையோடு ஒட்டியவை; அவருடைய கதா பாத்திரங்களோ நம்மைச் சுற்றி இருப்பவர்கள்; நம் மோடு நெருங்கிப் பழகுபவர்கள்; நம்முடைய இன்ப துன்பங்களிலும், சுகதுக்கங்களிலும் நாள் தோறும் பங்கெடுத்துக் கொள்பவர்கள். எனவே, கம்மால் அவர்களே எளிதில் இனம் கண்டுகொள்ள முடிகிறது; அளவளாவ முடிகிறது; அனுதாபமும் ஆனந்தமும் கொள்ள முடிகிறது. ஆங்கிலக் கதைகளைப் படிக்கும்போது நமக்கு உண்டாகும் அவஸ்தை தோழர் ஆறுமுகத்தின் கதைகளேப் படிக்கும் போது உண்டாவதில்லை,

ஒரு காலத்தில் சொர்க்கத்துக்கு இருக்க மதிப்பு இந்தக் காலத்தில் காதலுக்கு இருக்கிறது. இரண்டும் கற்பனேயே என்மூலும் காதலை கம்மால் கைவிட முடிவ தில்லை. வாழ்க்கையில் இல்லாத காதல் கதைகளிலாவது இருந்துவிட்டுப் போகட்டுமே! என்று நாம் கினைக்கிருேம். இத்தகைய காதலைப் பின்னணியாகக் கொண்டு பின்னப் பட்ட கதைகள் பல இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக் கின்றன. எனவே, அமிர்த த்துக்காக நீங்கள் அசக்கர்க ளுடனே, தேவர்களுடனே சண்டையிட வேண்டியதில்லை; பாற்கடலையோ, பாலில்லாத கடலையோ கடையவேண்டிய தில்லை. இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்தால்போதும். அமிர்தம்’ உங்கள் கைக்கு மட்டுமல்ல, வாய்க்கும் கிட்டி

விடும். .

Gsపోటా ) வணக்கம். 25–10–51 விக்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/6&oldid=616827" இருந்து மீள்விக்கப்பட்டது