பக்கம்:அமிர்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வயது முதிர்ந்த ஸ்திரீ ஒருத்தி பயங்காரமாக வெறித்து நோக்கியபடி படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். அவள் முகத்தில் சவக்களை பிரதிபலித்தது. அவள் கைகளைப் பிடித்தபடி அழுதாள் அந்த இளம் யுவதி.

அவளைப் பரிதாபம் நிறைந்த கண்களால் நோக்கி, “அம்மாவுக்கு என்ன உடம்பு?” என்றேன் அன்பாக. கண்களில் பொங்கி வழிந்த நீரைக் கட்டுப்படுத்த முடியாதவளாய், “ஐயா, என் தாய் படும் நரகவேதனை இந்த ஜன்மத்திலா தீரப்போகிறது. இனி கட்டையுடன்தான்.”

காரணம்?

“ஆமாம்; அதைத்தான் சொல்லவிருந்தேன். தன் புதல்வி-எனக்கு மணம் செய்வித்து பெற்ற மனம் குளிரக் கொடுத்து வைக்காமல் அவள் கணவன்-என் தந்தை இறந்துவிட்டாரே என்ற ஏக்கம். அன்று சவத்தைக் கட்டிக்கொண்டு அழுததை இப்பவும் நினைத்தாலும் ஒரை பயமாக இருக்கிறது. அன்று ஆரம்பித்த பிதற்றல், இன்னும் திரவில்லை.”

இவ்விதம் சொல்லி முடித்து, பின் தலைநிமிர்த்தாள். ஒருகணம் அவளது பார்வையில் ஒருவித லஜ்ஜை! தான் இதுவரை பேசிக்கொண்டிருந்தது தன் வயதொத்த ஓர் இளைஞனிடம் என்ற எண்ணம் போலும்! பெண்களுடன் பிறந்த நாணம் அவளையும் வந்தணைய என்னை வழியனுப்பினாள்.

நாட்கள் நழுவின. ஆனால் அன்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என்னுள் எதிரொலித்து நின்றது.

ஒருநாள் ஆபீசிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். அவள் கையில் பட்சணம் நிறைந்த ‘பிளேட்’டை என் மேஜைமீது வைத்து “அவசியம் இதைத் தாங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இன்று என் பிறந்த நாள்” என்று. மன்றாடினாள். உவந்தளித்ததை பூரிப்புடன் புசித்தேன்.

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/61&oldid=1313522" இலிருந்து மீள்விக்கப்பட்டது