பக்கம்:அமிர்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்ணம் தோன்றியதும் மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பிவிட்டது.

இந்த நாடகமெல்லாம் பாஞ்சாலிக்கு எட்டாதிருக்குமா? அவள் உள்ளத்தில் பொருமைத் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

“என் அத்தான் நான் கண்ணுலம் கட்டிக்கவேண்டிய மொறை அத்தான் - அவரை நேத்திக்கு வந்த அனாதைச் சிறுக்கி மயக்கிப்பிட்டாளே. எங்கண்ணிலேயும் மண்ணேத் துளவிப்பிடுவாளே”

நெய்யுண்ட நெருப்புப் போலானது அவள் கெஞ்சம்.

அப்போது தெருவைப் பெருக்கிவிட்டு வீட்டிற்குள் துழைந்த பூங்கொடி திக்பிரமை பிடித்தவள் போல அப்படியே கின்றுவிட்டாள் கற்சிலையாக. அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் நாராசாமென விழுந்தன. “நான் அப்பவே சொன்னேனே கேட்டிங்களா? பலே கைகாரியாக இருப்பாண்ணு எனக்கு முன்னமே தெரிஞ்சுதே, அவ ஆடிக்குலுங்கி சினிமாக்காரிபோல நடந்து வாதிலேருந்து. பாஞ்சாலிக்கு சொந்த அத்தான். எனக்குத் தம்பி. அதுக்கும் கேத்திக்கு வந்த அளுதைக் கழுதைக்கும் என்ன சம்பந்தம். வரட்டும் அவள் உண்ட வீட்டுக்கே ஒலைவச்சுப்புட்டாளே. அது கண்ணிலே மையைப் போட்டில்ல மயக்கிப்பிட்டா பாவி.”

பூங்கொடி தளுப்பி நின்ற கண்ணீரைத் துடைக்கக்கூட நினேவின்றிப் புறப்ப்ட்டுவிட்டாள் கால் சென்ற வழியே. காவேரி! அந்த எண்ணம் மின் வெட்டியது பேதையுள்ளத்தில், அன்னை காவேரியிடம் அடைக்கலம் பெற விரைந்தோடிச் சென்ற சமயம்தான், கந்தன் அங்கு தோன்றிய காட்சி அவளுக்கு வாழ்வின் புது மலர்ச்சியென இருந்தது!

“பூங்கொடி

புது வெள்ளத்தின் உற்சாகம் தொனிக்க அன்பு கொஞ்சும் குரலில் தன் மனைவியை அழைப்பான் கந்தன்.

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/74&oldid=1319082" இலிருந்து மீள்விக்கப்பட்டது