பக்கம்:அமிர்தம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவளும் ஒடோடி வந்து துறு துறு வென்று ஸ்மாண செய்யும் அவளது குறும்புப் பார்வையைத் தன் கணவன் மீது சுழலவிட்டபடி அவனே வரவேற்பாள்.

கண்டிச் சீமையில் தேயிலைத் தோட்டமொன்றில் அவனுக்கு வேலை. காலையில் செல்லும் அவன் மறுபடியும் திரும்பும் சமயம் இருட்டிவிடும். அவன் வீட்டிற்குள் துழைவதற்கும்,பூங்கொடி சாதத்தைப் பரிமாறித் தயாசாக வைத்திருப்பதற்கும் கணக்காக இருக்கும். பசிக்களைப்பில் அடைத்தவாய் திறக்காமல் தட்டைக் காலி செய்துவிடுவான் கந்தன். ஆமாம்; தன் வாவிற்காக நெடுநேரம் வரும் வழியின்மீது விழி தாழ்த்திய வண்ணம் காத்துக்கிடக்கும் தன் அருமை மனைவி கொஞ்சும் கிள்ளே மொழிகள் உதிர்த்த வண்ணம் உணவு பரிமாறும் சமயம் கூழானுலும் அவனுக் குத் தேவாமிர்தம் போன்று சுவை மிகுந்துதானே காணப் படும்? சாப்பிட்டுக் கை அலம்பியவுடன் கையில் மடித்து வைத்திருக்கும் வெற்றிலையை அவனிடம் நீட்டுவாள். வற்றிலையை வாயிலிட்டு மென்றவண்ணம் வாசலில் துண்டை விரித்துப் பேச உட்கார்ந்துவிடுவார்கள் அந்த எழைத் தம்பதிகள் இரண்டு பேரும். அப்போது காலம் போவதே தெரியாது. - . . . . . . . . . - -

அவர்கள் இருவரும் ஏழைத் தம்பதிகள். ஆமாம்: அது அவர் களது குற்றமல்லவே. அந்த ஏழைப்பங் காளன் அன்றாே அவர்களை அங்ஙனம் சதிசெய்துவிட்டான். ஆனல், அவர்கள் தங்களது ஏழ்மை கிறைந்த வாழ்விலே காணும் இன்பத்திற்கு ஈடே இருக்க முடியாதல்லவா? :

காலச்சக்காம் கனவேகத்தில் சுழன்று, வருஷம் ஒன்று அதற்கப்புறம் ஒடிவிட்டதை அறிவித்தது. அப்பொழுது ஆங்கொடி சாதாரணப் பூங்கொடியாயிருந்தாள். ஆனல் , இன்றாே அவள் ஒரு தாய்!

நாட்கள் கழுவின. அன்று ஒருநாள் :பூங்கொடி’ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தான் கந்தன். சரோஜாவைத்

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/75&oldid=616859" இருந்து மீள்விக்கப்பட்டது