பக்கம்:அமிர்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவளது விம்மிக்கிடந்த மனத்தில் தங்கவேலின் மோகன உருவம் காட்சியளித்தது.

“ஐயையோ! இந்தக் கப்பலுக்குத்தானே போறதாகச் சொன்னாரு!”

அதற்கு மேல் அவள் அங்கு விற்கவில்லை. வேகம். வேகமாக ஒடிஞள், கனவேகத்தில் சுழன்று செல்லும் மனோரதத்தையும் போட்டியிட்டுக்கொண்டு.

உண்மையாக நடந்ததைச் சொல்லித் தன் மாசுமறுவற்ற தன்மையையும், விதி தன் வாழ்வில் ஆசைதீர விளையாடிய விந்தை பற்றியும் விஸ்தாரமாகக் கூறி, தன்பேரில் கிஞ்சித்தும் அவருக்குச் சந்தேகம் இருக்காமல் செய்ய வேண்டும் என எண்ணித் துடித்தது அவள் பேதை உள்ளம்.

ஆனல் கடந்தது! குமுறும் கடலைக் கூர்ந்து பார்த்தாள். அப்போதுதான் கப்பல் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் நகர்ந்து சென்றது. அல்லலுற்ற மனம் ஆறுதல் எய்த மார்க்கம்......?

கலங்கிய கண்களுடன் ஏறிட்டு விழித்தாள். தன் கணவன் வந்துகொண்டிருப்பதைக் கண்ட அவள், சிறு குழந்தை போல தேம்பி அழுத வண்ணம் அன்று வரை மனதை அழுத்திக்கொண்டிருந்த சங்கதி பூராவையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்.

திரும்பவும் நீர் கிரம்பிய கண்களுடன் நீலத் திரைக் கடலைப் பார்த்தாள். கப்பல் மறைந்துவிட்டது. ஆனால், குமுறிப் புரளும் அலைகளின் பேரிரைச்சல்தான் அவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

“அம்மா-அம்மா!

குழந்தை தன் மழலை மொழியில் கொஞ்சும் குரலில் அழைப்பதைக் கேட்டதும்தான் அவளுக்குச் சுய நினைவு

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/77&oldid=1319088" இலிருந்து மீள்விக்கப்பட்டது