பக்கம்:அமிர்தம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வந்தது. அவள் உள்ளக் கடலில் அதுவரை ஆர்ப்பரித்த வண்ணமிருந்த எண்ண அலைகள் ஒய்ந்தன. திடுக்கிட் டெழுந்தாள், முகத்தில் தோய்ந்திருந்த நீர்த்திவலைகளே தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு.

சரோஜாவைப் பார்த்தாள் தந்தையின் தோளில் ஒய்யாசமாகச் சாய்ந்திருந்த அக்குழந்தை .ெ சா ட் டி த் துண்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது. அதற்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. -

பூங்கொடிதன்கணவனிடமிருந்து குழந்தையை வாங்கி, சிழேகிடந்த அந்த ஐரிகை கவுனே எடுத்துப்போட்டாள் சரோஜாவிற்கு அக்சமயம் அதன். ஆனந்தம் பன்மடங்காகி கிவப்புக் கன்னங்களில் குழி விழுந்தின. அதன் எழிலில் மனம் பூரித்து அப்படியே வாரியணைத்த வண்ணம் உச்சி மோத்தாள் பூங்கொடி. அப்பொழுது அத்தாயுள்ளம் அடைந்த ஆனந்தத்தை அளவிடல் சாத்தியமாகுமா?

இந்த வேடிக்கை முழுவதையும் அடைத்த வாய் திறக் காமல் கவனித்துக் கொண்டிருந்த கந்தன் எதுக்காக கொஞ்சநேரத்துக்கு முக்தி புள்ளையைப் பளீர்னு அப்படி அறைஞ்சியாம். அப்புறம் இப்ப இம்பிட்டுத்தாம் என்னத் துக்குக் கொஞ்சமீயாம்” என்று கேட்டான் கந்தன் கிண்டலாக, - -

“அடிக்கிற கைதானே அப்புறம் அணைக்கவும் செய் யும்” என்று பதில் கொடுத்தாள் அவள் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல்! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/78&oldid=616865" இருந்து மீள்விக்கப்பட்டது