பக்கம்:அமிர்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“தாங்கள் அறுத்து விட்டது இரண்டாவது தந்தி. முதல் தந்தியை நானே........”
“வாஸந்தி! நீ முந்திக்கொண்டு விட்டாயா”

அறுந்த தந்தி


வாஸந்திக்கு மூளை வெடித்துச் சிதறிவிடும்போலிருந்தது. தொடர்ந்து எதையுமே அச்சமயம் அவளால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. தாசு தட்டித் துடைத்து வைக்கப் பட்டிருந்த அந்த வீணையை மீண்டும் ஒரு முறை நோக்கினாள். மருட்சி தோய்ந்த அவள் விழி வீச்சில் அடியுண்ட மானின் வேதனை ஏக்கம் சுடர்விட்டது. ஜன்னல் கம்பிகளினூடே பாய்ந்து ஒளி பாப்பியிருத்த அந்தி வெய்யலின் செங்கதிர்கள் வீணைமீது படிந்திருந்தன. அக்காட்சி அவள் நைந்த மனதை ரம்பம்போல அறுத்தது. அந்த நாட்களில் தன் அக்காள் சுலோ வீணை வாசித்து அத்தானை மகிழ்வுறச் செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைவு படுத்திப் பார்த்தாள் வாஸந்தி. நெடுமூச்சு வெடித்துக் கிளம்ப, இமை வட்டங்களில் நீர்த்திவலைகள் வரம்பு கட்டின.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். மத்தியானம் உண்டு முடிந்ததும் ஹாய்யாக உட்கார்ந்து வம்பளத்து வீண்பொழுது கழிக்கத் திட்டமிட்டிருந்தான் மூர்த்தி. அதற்கு வாஸந்தியும் பூரண சம்மதம் கொடுத்திருந்தாள். ஆனல், யார் சூதோ தம்பதிகளின் ஒட்டிய இரு உள்ளங்கள் ஏகோபித்தப் போட்டிருந்த ஏற்பாடு சடுதியில் நிலைகுலைந்தது. மூர்த்தி முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்தவன் போல விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துக்கொண்டான் தன் இதய ராணியிடம். பதியின் ஆசை வேண்டுகோள் வாஸந்தியை மனமுடையச் செய்துவிட்டது.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/79&oldid=1322906" இலிருந்து மீள்விக்கப்பட்டது