பக்கம்:அமிர்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போலும்! இல்லையென்றால் அவள் கண் கலங்கக் காரணம்......?

“வாஸந்தி நானும் யோசித்து யோசித்துப் பார்த்து விட்டேன். எப்படியும் திரும்பவும் ஒருதரம் உன் தமக்கை சுலோ வாசிக்கும் அந்த “தந்தியிலெழுவது நாதம்” என்ற பாட்டை வீணையில் இசைத்துக் கேட்கவேண்டும் என்ற அபரிமிதமான ஆசை என்னேப் பைத்தியமாக ஆட்டி வைக்கின்றது. ஆனல் அந்தப் பாட்டை சுலோ மாதிரி உன் ஒருவளாலேயே அத்துணை திறம்பட வாசிக்க முடியும். வாஸந்தி, மறுக்கமாட்டாயே?” என்று கேட்டுக்கொண்டான் மூர்த்தி. இயல்பான அவன் ஆணையில் - அல்ல விண்ணப்பத்தில் கம்பீரம் ஒடுங்கி ஒலித்தது. தலையை உயர்த்திப் பார்த்தாள் கணவனை. உடனே தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். புருஷன் கொண்ட மனைவியிடம் வேண்டுவதா என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் “ஆகட்டும்” என்று ஒப்புக்கொண்டாள். மூர்த்திக்கு அப்பொழுது ஆகாயத்தில் ‘ஜில்’ வென்று பறப்பது போன்ற உணர்ச்சி உடலெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது.

ட்வகேட் அனந்தசாமனின் பெயருக்கும் புகழுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர் அவரது இரு புதல்விகளும். மூத்தவள் சுலோ; இளையவள் வாஸந்தி. ஒரே கிளையில் பூத்த இரு மலர்கள் அவர்கள். அழகு அரியணை வகிக்கும் கனவுப் பதுமைகள் சுலோவும் வாஸந்தியும். வளர்ச்சியும் கவர்ச்சியும் அவர்களுக்குப் பருவ எல்லையை கிர்ணயித்தது. சுலோவிற்கு வாஸந்தியைவிட ஒரு வயதுதான் அதிகம் என்றாலும், முதலில் சுலோவின் கல்யாணத்தைப் பற்றிய கவலேதான் அனந்தசாமனுக்கு உண்டாயிற்று. ஆனால் கலியாணத்தைப் பற்றி வரன் விஷயமாகத் துளிகூட யோசிக்கவேண்டிய நிர்ப்பந்தமில்லை அவரைப் பொருத்த மாத்திரத்தில், கையில் கரும்பை வைத்துக்கொண்டு கற்கண்டுக்கு யாரேனும் அலைவார்களா என்ன? தன் சகோதரி

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/80&oldid=1322908" இலிருந்து மீள்விக்கப்பட்டது