பக்கம்:அமிர்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இதோ புறப்படப் போறேனே! ஆமா நீங்க......” என்று பூவாயி சுவாதீனத்துடன் கேட்டு நிறுத்தினாள். மாணிக்கத்தை இன்னுமொரு முறை நிமிர்ந்து பார்க்க வேண்டும் போலிருந்தது; பார்த்தாள். அடுத்த வினாடி நிமிர்ந்த பார்வை கீழே தஞ்சமடைந்தது.

“நானா, இதோ-” எனக் கூறி ‘ட்ரியோ’ வென்று ஒர் அதட்டுப் போட்டான் மாணிக்கம். சிதறிக்கிடந்த ஆடுகள் அப்படியே சரம் சரமாக ஒதுங்கி நின்றன, அணி வகுத்து நிற்கும் பட்டாளம் போன்று.

பூவாயி அதிசயித்தாள். அவள் கடை இதழில் புன் முறுவல் புறப்பட்டது. மாணிக்கம் சொக்கிப்போனான்.

அப்புறம் இருவருமே சேர்ந்து ஆடுகளை ஓட்டி வருவார்கள். தழை கண்ட இடங்களில் மேயவிட்டு மாத்து நிழலில் மானிக்கமும் பூவாயியும் உட்கார்ந்து என்ன வெல்லாமோ பேசித் தீர்ப்பார்கள். இந்த நட்பு மூன்றாம் பேருக்கு-என் பூவாயியின் தகப்பனுருக்கே தெரியாது.

மாணிக்கம் ஒரு நாடோடி ஊர் ஆடுகளை மேய்த்து ஒரு வழியாக வயிறு வளர்த்து வந்தான். அவன் ஆணழகன். விசாரிக்கப் போக அவனும் தன் இனம் என்ற புள்ளிவிபரம் அறிந்து கொண்டதும் பூவாயிக்குச் சந்தோஷம் தாளவில்லை. “மாணிக்கம்” என்று வாய் நிறையப் பெயர் கூவி அழைத்துச் சிட்டுக் குருவிபோலப் பேசிப் பழகி வரலானாள் அவள்.

ஆனால் அன்று அப்படிப்பட்ட ஒரு தடங்கல் ஏற்படும் என்று பூவாயியோ அல்லது மாணிக்கமோ ஒரு போதும் நினைத்திருக்கமாட்டார்கள். பூவாயி அப்பொழுது-

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/91&oldid=1313473" இலிருந்து மீள்விக்கப்பட்டது