பக்கம்:அமிர்தம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ர் என்றால் சாதாரணமாகச் சண்டையும் சச்சரவும்.

ரொம்பவும் சகஜம், என்றாலும் அந்த ஊரில் ஐயனார் திருவிழாவை ஒட்டிக் கிளம்பின பூசலைப்போல் இதற்கு, முன் நிகழ்ந்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். நியாயம் தலைமறைவில் ஒதுங்கிக் கிடந்தது.

அந்தக் கிராமத்தில் இரண்டு கரை -அதாவது இாண்டு தரப்பு நாட்டாண்மை, ஒன்றிற்கு அதிபன் கண்மணி. எதிர்க்கட்சி வடிவேலுவின் தலைமை. ஒவ்வொரு உற்சவமும் ஆரம்பிப்பதற்குமுன் கோவில் சங்கதியில் எந்தக் கட்சி ‘குதிரை எடுப்பு’ எடுக்கவேண்டுமென்பதை நிர்ணயிக்கும் பொருட்டு சீட்டுக்கள் குலுக்கிப் போடுவார்கள். குலிக்கி எடுக்கப்பட்ட சீட்டின் உத்தரவை தெய்வக் கட்டளையாக எண்ணி அதன்படி நடப்பார்கள். இதுவே நியதி. அம்மாதிரித்தான் கண்மணி விழாவிற்கு உரியவன் என்று அன்று கண்டிருந்தது. ஆனால் வடிவேலு இதற்குச் சம்மதிக்கவில்லை. அவன் அந்த வட்டாரத்தில் பழைய பேர்வழி. ஆள் கட்டும் ஜாஸ்தி. இரண்டு வகையிலும் தன் பக்கம் வலு அதிகமாக இருக்கையில் கண்மணியைத் துச்சமாக எண்ணிவிட்டான் வடிவேலு.

“மாமா, இந்தச் சங்கதியிலே நாம் தலையிடாம ஒதுங்கிக்கிட்டா என்ன ? வினை செஞ்சவுங்க வினை அனுபவிக்காமல் இருக்கமாட்டாங்க. மானாங்கன்னியா அம்பிட்டுக் கிட்டு அப்புறம்.....” என்று எவ்வளவோ நயமாகக் கண்மணியிடம் சொல்லிப்பார்த்தாள் பூவாயி,

“உயிர் போனலும் சரி; வடிவேலுவை இந்தத் தடவை ஒரு கை பார்த்து முடிச்சாத்தான் மனசு சும்மா கிடக்கும்” என்று சபதம் செய்துகொண்டான் கண்மணி.

பூவாயியின் விழிக்கோணத்தில் நான்கு முத்துக்கள் கண்ணிர்! கதி கலங்கினாள்.

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/93&oldid=1444416" இலிருந்து மீள்விக்கப்பட்டது