பக்கம்:அமிர்தம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விடித்தால் ஐயனர் கோயில் குதிசை எடுப்பு நாள். இரவு

ஊரடங்கிய தருணம். புலர்ந்ததும் கிருவிழாவைப் பற்றி எப்படிப்பட்ட பூசல்கள் உதயமாகுமோ என்று நினைத்து நெஞ்சுருகிய பூவாயிக்குத் தாக்கமே பிடிக்க வில்லை. ஐயருை தெய்வமே, அத்தானுக்கு உன் கிருபை யாலே சங்கடம் எதுவும் வாாமல் தோன் ஒத்தாசை செய்ய லும், அது ஒண்டிக்கை மனுசன் ” என்று வேண்டிக் கொண்டாள் அவள்.

வாசலில் காற்றாடப் ப டு த் தி ரு ங் த ன் கண்மணி. அவன் கண்கள் விழித்திருந்தன. உள்ளமும் விழிப்பில் ஈடு கொடுத்துச் சுழல் வட்டம் பாய்ந்தது. விடியவும் நடக்கவிருக்கும் சம்பவத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தான், யுத்த அரங்கிலே சிந்தனையைச் செலவிடும் தளபதிமாதிரி. அவ னுக்கும் கையாட்கள் பலர் இருக்கத் தான் இருந்தனர். நியாயத்திற்குத்தானே மதிப்பு அதிகம்

. கிடைக்கும்

“கிடுதிப்பென்று யாரோ மரத்தடியில் மறைந்து வருவது தெரிந்தது. உடனே விசுக்கென்று எழுந்தான் கண்மணி. தன்னைப்பற்றி வேவு பார்க்க யானையாகிலும் வடிவேலு அனுப்பியிருப்பான் என்பதை அறிந்ததும் அவன் சந்தேகம் வலுக்க எத்தனித்தது.

பூவாயி “ என்று குரல் கொடுத்துவிட்டுக் கையில் லாந்தர் விளக்குடன் மெல்ல அடியெடுத்துவைத்தான் கண்மணி. நீண்ட சுழல் கழியுடன் ஓடிவந்தாள் பூவாயி. அவள் நீட்டிய கம்பை வாங்கி கண்மணி பதுங்கியிருந்த ஆளே ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு, கட்டாயம் இந்தப் பயல் எதிரி ஆள்தான்’ என்று சம்சயித்தவளுய்க் கம்பை இங்கி அந்தப் புது மனிதன்மீது வீசப்போன்ை. ஆனல் அந்த ஆளே ஆழ்ந்து நோக்கிளுள் பூவாயி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/94&oldid=616899" இருந்து மீள்விக்கப்பட்டது