பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மண்ணுல கின்ப மெல்லாம்
மகிழ்ந்துட்ட வந்த வாழ்வே.
விண்ணெலாம் தோற்க; இன்பப்
பழச்சுவை எலாம் ஒதுங்க
விண்ணுலா புள்ளி னத்தின்
விழைமன இசை மறக்க
எண்ணிலா மழ்லைப் பேச்சில்
இணைத்தனை இசைமின் சோதி!

நினதெழில் மழலை ஞாலம்
நிறைந்திடும் புளக மூட்டும்!
நினதுயிர் மழலை விண்ணில்
நிறைந்திடும் கால் மணக்கும்
நினதுயிர் மழலை, கல்லை
நிகரிலா தங்க மாக்கும்!
நிணதொளிக் கனவில் வாழ
நிதமும்நீ மிழலை தாராய்!

12