பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தத் தோடுள் ளாழும்:
ஆசையுள் மனிதர் காணும்.
ஆனந்தத் தெல்லை நியே!
அறம்பொருள் இன்பம் கூட்டும்
ஆனந்தத் துயர்வும் நீயே!
அன்புல கெங்கும் கானும்
ஆனந்தத் துயிர்ப்பும் நீயே !
அன்பிடைக் காப்பே! வாராய்!

வாழ்வான தமிழே வாவா..!
வாழ்வான அமுதே வாவா !
வாழ்வான கதிரே வாவா !
வாழ்வான நிலவே வாவா !
வாழ்வான உலகே வாவா!
வாழ்வான சுகமே வாவா !
வாழ்வான பாட்டே வாவா !
வாழ்வான செல்வ மேவா!.


24