பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு பறை!


எழுபிறப் பின்பங் கோடி
இணைந்தநல் பண்பின் சான்றே !
விழுப்புணை அணியாய்க் கொண்ட
வீரமாத் தமிழின் தூணே!
இழிநிலை திராவி டத்தே
ஏற்றினர் ஒருசார் கும்பல்.
ஒழித்திடு!புதுமை சேர்க்க
சிறுபறை கொட்ட டாநீ!

27