பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிற்றில் சிதைத்தல் !

பூவாத தாம ரைக்கா
புதுமலர் பேதைப் பெண்கள்
நாவாரப் பாடி வீதி
நாப்பணில் கனவார் வத்தைக்
கோவாநல் இல்ல மாக்கிக்
குடும்பத்தை நடத்து வார்கள்
நோவாத இளம்நெஞ் சங்கள்
நோந்திடும் ! சிதையேல் சிற்றில் !

29