பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு தேர்


மாணிக்கச் சிற்பக் கூத்தில்
வானத்து மீனி ழைத்துப்
பானுவை மதியை ஒடும்
உருளையின் பக்கம கூட்டி
ஆணிப்பொன் குழமபைக் கொட்டி
அற்புதக் கலைக்கோ யில்போல்
காணிக்கை தந்தேன் கண்ணே !
சிறுதேரை உருட்டி வாராய் !