பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

"தொகைபோட் டுவாங்க ஒண்ணாத்
தூய்அமிழ்தே கண்ணு றங்காய்"

---புரட்சிக் கவிஞர்

அரிய இனிய இரண்டன் புளத்தின் காதல் வானிலே வாழ்வுப் பயிர் நிலைக்கப் பொழியும் செல்வமே குழந்தை யமிழ்து. அதன் இன்பமும் பயனும் அன்பும் அருமை மிக்கது! பெருமைக்குரியது!-குழந்தைகளைப் பற்றிப் பாடாத கவிஞர்களே கிடையாது! அவர் தம் சிறு சிறு விளயாட் டும், சிரிப்பும், மழலையும், அழுகையும், நடத்தலும், பேசலும் பாடலும, உள்ளத்தில் உணர்வோவியமாகின்றது. அந்த உணர்வோவியத்தின் சிறு கலையோவியமே இக்கவியோவியம்!

அன்பு
த. கோவேந்தன்