பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்துஆண்பெண்ணின் அகவ ரங்கின்
அற்புதக் கனவில் கூடி,
மாண்புடன் காதல் படி,
மகிழ்வலை நடன மாடி,
காணமில் கதைய மைப்பில்
நவரசம் கூட்டிக் காட்டி,
விணையின் பொன்னி சைபோல்
வெளிவந்த குழந்தாய் வாழ்க!

5