பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீ யார்?


புதிதான் உணர்ச்சி வானில்
பூத்திட்ட சோதிப் புள்நீ !
புதிதான் எண்ண யாழில்
புதைந்தெழும் இசை மணம்நீ!
புதிதான் இதயப் பாட்டில்
பொருள்நிறைக் காவி யம்நீ!
புதிதான் அனுப வத்தில்
புகழ்தரும் உண்மை யும்நீ!

7