தாலே தாலேலோ ! செல்லத்துரையே தூங்கிடடா! - என் ஜீவ அமுதே தூங்கிடடா! - -செல்லத்துரை.... பிள்ளைக்கனியே இளம்பிறையே பேசும் சிலையே பாலகனே ! செல்லத்துரை.... அலையிலே விளையா நல்லமுதே ஆருயிரே என் பாலகனே கலைகளில் இல்லாக் காவியமே கருவில் வளர்ந்த ஓவியமே! உலகினில் இல்லாத் தீஞ்சுவையே உயிரே இன்பக் கற்கண்டே மலையிலே விளையா மாணிக்கமே மகவாய் வந்த பேரொளியே! -செல்லத்துரை..... மலர்களில் வீசும் வாசனையே மதுவினில் ஊறும் பெருங்களிப்பே தளிர்களில் தவழும் பேரழகே தவத்தால் கிடைத்த நன்முத்தே! வளர்மா மதியே வான்சுடரே வண்ணத் தமிழே என்மகனே ஒளிரும் பொன்னே தொட்டவர் தம் உள்ளம் மகிழச் செய்பவனே! -செல்லத்துரை.... சேர சோழ பாண்டியர் தம் தீரமெல்லாம் ஓருருவாய் சேரப்பெற்ற மாமணியே ஜெகத்தை ஆளப் பிறந்தவனே! ஆரம் சூடிப் பட்டணிந்து அன்பாய்ப்பேசி புகழ் படர்ந்து வீரம் பேணி தமிழ் வளர்த்து வாழ்க நீயும் பல்லாண்டு! 98 - செல்லத்துரை.....
பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/101
தோற்றம்