இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஜீவ மருந்து ! அன்னையும் அப்பனும் தந்த மருந்து ஆயிரம் காலத்து ஜீவ மருந்து மண்ணில் எல்லார்க்கும் கிட்டா மருந்து வ மக்களின் மெய்தீண்டும் மகிழ்ச்சி விருந்து! தொட்டாலே இன்பத்தை நல்கும் மருந்து சொன்னாலே நாவும் மணக்கும் மருந்து கட்டிக் கரும்பாய் இனிக்கும் மருந்து கவலையைப் போக்கும் குழந்தைச்சொல் அருந்து! ஒவ்வொரு ஜீவனும் வேண்டும் மருந்து உள்ளத்தை மகிழ்விக்கச் செய்யும் மருந்து திவ்வியமாம் நற்சேய்கள் நிறைந்து செவியாரத் தரும் சொல்லைக் கேட்பாய் இருந்து! 101